வீட்டை இடித்த சிவசேனா மீது கங்கனா மீண்டும் தாக்கு.. ’இது பாசிசம் போல் தோன்றுகிறது’

ளும் மகாராஷ்டிரா சிவசேனா கட்சியின ருக்கும், நடிகை கங்கனாவுக்கும் மோதல் அதிகரித்து வருகிறது. மும்பை இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிர் போல் உள்ளது என கங்கனா கூறியதற்கு சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கடுமையாக கண்டித்தார்.


மும்பையில் உள்ள கங்கனா வீட்டில் அனுமதி பெறாமல் சட்டவிரோத கட்டு மான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப் பதாக போலீசாருடன் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் வந்த பி.எம்.சி எச்-வெஸ்ட் வார்டு அதிகாரிகளின் குழு ஜே.சி.பி.க்கள், புல்டோசர்கள் மற்றும் கனரக வாகனங்களுடன் கங்கனாவின் கட்டத்தை இடித்தனர்.


இதுகுறித்து கங்கனா டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கங்கனா, சட்ட விரோத மாக எனது வீட்டில் கட்டுமானம் எதுவும் இல்லை, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை கொரோனா காரணமாக எந்த இடிப்பை யும் செய்யக்கூடாது என அரசாங்கம் தடை செய்துள்ளது, இப்போது இது பாசிசம் போல் தோன்றுகிறது’ என தெரிவித்திருக்கிறார்.
மற்றொரு டிவிட்டில், ’நான் ஒருபோதும் தவறு செய்யவில்லை, என் எதிரிகள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள், இதனால்தான் மும்பை இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிர் போல் உள்ளது என பதிவிட்டுள்ளார்.


மும்பை மாநகராட்சியினர் தனது வீட்டு கட்டிடத்தை இடிக்கும் படங்களை வெளியிட்ட கங்கனா ’பாபர் மற்றும் அவருடைய ஆர்மி’ எனக் குறிப்பிட்டுள் ளார்.
கங்கனாவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிளஸ் கமாண்டோ பாதுகாப்பு அளித்திருப்பது குறிப்பிடத் தக்கது.