ஜெயலலிதா வேடத்தில் ’’மாஸ்க்’’ அணிந்து நடித்த கங்கனா.. புதிய தகவல்..

 

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘’ தலைவி’’ என்ற பெயரில் சினிமாவாக இயக்கி வருகிறார், ஏ.எல்.விஜய். பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதாவாக நடிக்கிறார். எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார்.

கொரோனா காரணமாக முடங்கி இருந்த இதன் படப்பிடிப்பு 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில், அண்மையில் நடந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட இரு புகைப்படங்களை கங்கனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“ஜெயலலிதா மேடம் ஆசிர்வாதத்துடன் தலைவி – படத்தின் இன்னொரு செட்யூல் முடிந்து விட்டது. கொரோனா வைரஸ், சினிமாவில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்திருந்தாலும், ‘டேக்குக்கு’ மத்தியில் சொல்லப்படும் ‘ஆக்‌ஷன்’… ‘கட்’ மட்டும் மாறவில்லை.” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

கங்கனா வெளியிட்டுள்ள அந்த கறுப்பு- வெள்ளை புகைப்படத்தில், ஜெயலலிதா; கெட்டப்’பில் கங்கனா சேலை- ஜாக்கெட் அணிந்து சட்டபேரவைக்கு செல்வது போன்றும், சட்டப்பேரவையில் முகக்கவசம் அணிந்து அமர்ந்திருப்பது போன்றும் காணப்படும் காட்சிகள், ஜெயலலிதாவை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன..

சட்டசபை கூட்டத்தில் ஜெயலலிதா பங்கேற்பது தொடர்பான காட்சிகளை படமாக்கியபோது, துணை நடிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, கங்கனா ‘மாஸ்க்’ அணிந்திருக்கலாம் என தெரிகிறது..

இந்த காட்சிகள் படத்தில் இடம் பெறுமா என்பது தெரியவில்லை.

– பா.பாரதி

You may have missed