கங்கணா கோரிக்கையை ஏற்று, இந்திப் பதிப்புக்கும் ‘தலைவி’ என்றே பெயரிட்டுள்ளது…!

விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடிக்கவுள்ள படம் ‘தலைவி’. இது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட படமாகும். இதில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடிக்கவுள்ளார்.

இந்த படம் தமிழ் , தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ளது . தமிழிலும் தெலுங்கிலும் ‘தலைவி’ எனவும் இந்திப் பதிப்புக்கு ‘ஜெயா’ என்று தலைப்பிட்டு இருந்தது படக்குழு.

நாம் ஏன் மொழிக்கு மொழி பெயரை மாற்ற வேண்டும் , ‘தலைவி’ என்ற தலைப்பே இந்தியிலும் இருக்கட்டும். அப்போது தான் மக்களுக்குப் புரியும் என்று படக்குழுவினருக்கு எடுத்துரைத்துள்ளார் கங்கனா.

கங்கணா வைத்த கோரிக்கையை ஏற்று, இந்திப் பதிப்புக்கும் ‘தலைவி’ என்றே பெயரிட்டுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி