இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு பொழுது போகாவிட்டால், ட்விட்டரில் யாரையாவது கலாய்ப்பார். இதனால் பல வழக்குகளை அவர் எதிர் கொண்டாலும் கவலைப்படுவதில்லை.

மாதவன் ஹீரோவாக நடிக்க கங்கனா, ஸ்வர பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்த ‘தனு வெட்ஸ் மனு’ என்ற திரைப்படம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸ் ஆனது.

ஆனந்த் எல்.ராய் இயக்கி இருந்தார். நல்ல விமர்சனத்தை பெற்ற இந்த படத்தின் 10 ஆம் ஆண்டு விழாவை யொட்டி, கங்கனா, இயக்குநர் ஆனந்த் ஆகியோர், ட்விட்டரில், மலரும் நினைவுகளை பதிவிட்டுள்ளனர்.

கங்கனா தனது பதிவில் “தனு வெட்ஸ் மனு படத்தில் நடிக்க என்னை அழைத்த ஆனந்துக்கு நன்றி. ஸ்ரீதேவிக்கு பிறகு நகைச்சுவை கேரக்டரில் நடிக்க நான் தான் சரியான நடிகை என்பதை இந்த படம் மூலம் சினிமா உலகம் உணர்ந்து இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

– பா. பாரதி