போதைப்பொருள் விசாரணை நடத்தினால், இந்தி சினிமா நட்சத்திரங்கள் கம்பி எண்ண வேண்டும்…

ந்தி நடிகர் சுஷாந்த் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரது காதலி ரியா சக்ரவர்த்தி மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் இந்தி நடிகை கங்கனா ரனாத் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

‘’ இந்தி திரை உலகில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் போதைப்பொருள் பயன் படுத்துகிறார்கள். போதைப்பொருள் தடுப்பு பிரிவு துறையினர், இது குறித்து விசாரணை நடத்தினால், இந்தி சினிமா உலகின் முன்னணி நபர்கள், சிறைக்குள் செல்ல வேண்டியதிருக்கும்’’ என கங்கனா ரானத் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

‘’ இளமை பருவத்தில் நானும் போதைப்பொருள் பயன் படுத்தி இருக்கிறேன்’’ என்றும் கங்கனா ஒப்புக்கொண்டிருக்கிறார்.

‘’ நான் சின்ன பெண்ணாக இருந்த போது, எனது குரு என்னை மது குடிக்க வைத்துள்ளார். நான் போலீசுக்கு போக்கூடாது என்பதால், எனக்கு போதை மருத்து கொடுத்துள்ளார். நான் சினிமாவில் வெற்றி பெற்றதும், பெரிய விருந்துகளில் கலந்து கொள்வேன். ஒழுக்கக்கேடு, போதைப்பொருள் பழக்கம் நிறைந்த சினிமா ஆட்களை அப்போது நேரில் பார்க்க நேரிட்டது’’ என ட்விட்டர் பக்கத்தில் மனம் திறந்து கூறியுள்ளார், கங்கனா.

-பா.பாரதி.