சுஷாந்த் சிங்கை பாலிவுட் ஏன் அங்கீகரிக்கவில்லை : கங்கணா ரணாவத்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. ‘கை போ சே’, ‘ஷுத்தேஸி ரொமான்ஸ்’, ‘டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி’ உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

சுஷாந்த் சிங் திடீரென்று தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் திரையுலகினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மறைவுக்கு இந்தியத் திரையுலகினர், இந்திய கிரிக்கெட் அணியினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக, நடிகை கங்கணா ரணாவத் காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இதில் அவர் பாலிவுட்டை கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார்.

“சுஷாந்த் தேசிய அளவில் தகுதி பெற்றவர். ஸ்டான்ஃபோர்டில் உதவித்தொகை பெற்றவர்.அவரது கடைசி சில பதிவுகளைப் பார்த்தீர்கள் என்றால் ஒரு விஷயம் தெளிவாகத் தெரியும். அவர், ‘எனது படங்களைப் பாருங்கள், எனக்கு காட்ஃபாதர் கிடையாது, நான் துறையிலிருந்து வெளியேற்றப்படுவேன்’ என்று அப்பட்டமாகக் கெஞ்சியுள்ளார்.