விஜய் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜெயலலிதா ’பயோபிக்’கில் ஜெயலலிதவாக நடிக்க கங்கணா ரணவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 24-ம் தேதி அன்று விஜய் இயக்கவுள்ள ஜெயலலிதாவின் பயோபிக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விப்ரி மீடியா நிறுவனம் தயாரிக்க மதன் கார்க்கி பாடல்கள் எழுத தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் தயாராகவுள்ளது இப்படம்.

இந்நிலையில், இப்படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கணா ரணவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கங்கணா ரணவத்தின் பிறந்த நாளான.இன்று இச்செய்தியை படக்குழு உறுதிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா பயோபிக்கிற்காக, அவரது அண்ணன் மகன் தீபக்கிடம் முறையாக தடையில்லா சான்றிதழும் பெற்றுள்ளது படக்குழு.