தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய கங்கணா…!

பாலிவுட் நடிகை கங்கணா ரணவத் சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

இதில் முதல் படத்துக்கு அபராஜிதா அயோத்யா என்று தலைப்பிடப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த அயோத்தியா ராமர் கோயில் வழக்கு பற்றிய படம் இது.

‘அபாரஜிதா அயோத்தியா’ படம், நாயகன் எப்படி கடவுள் நம்பிக்கை இல்லாதவனாக இருப்பதிலிருந்து கடவுள் நம்பிக்கை பெறுகிறான் என்ற பயணமே. அடுத்த வருடம் தொடங்கவுள்ள இந்தப் படத்தின் திரைக்கதையை பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தை விஜேயந்திர பிரசாத் எழுதியுள்ளார்.