பத்மஸ்ரீ விருதை திருப்பி தர தயார்.. பிரபல நடிகை கோபம்..

--

டிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு வாரிசு நடிகர்களின் புறக்கணிப்பும். ஊடகங்களில் இருந்து அவர் எதிர்கொண்ட அழுத்தம்தான் காரணம், அதனால்தான் சுஷாந்த் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என குறிப்பிட்டிருந்தார்.


இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்த போலீஸார் அழைத்தபோது வெளி ஊரிலி ருப்பதாக கூறினார்.

இதுபற்றி அவர் கூறும்போது,”மும்பை காவல்துறை என்னை வாக்குமுலம் தர அழைத்தது, நான் மணாலியில் இருப்பதால் என்னிடம் வாக்குமூலம் பெற நீங்கள் யாரையாவது அனுப்பலாம் என்றேன். ஆனால் பதில் எதுவும் தரப்படவில்லை. நான் சொன்ன கருத்தெல்லாமே பொது களத்தில் இருக்கிறது. நான் பொது வெளியில் சொல்லும் கருத்துக்கெல்லாம் நேரில் வந்து நிரூபித்துகொண்டிருக்க முடியாது, விசாரணைக்கு வந்து கருத்து பதிவு செய்யம் நபர் நான் அல்ல. எனக்கு தரப்பட்ட பத்மஸ்ரீயை நான் திருப்பித் தருகிற ”என்றார் கங்கனா.
பாலிவுட்டில் பல படங்களில் நடித்திருக்கும் கங்கனா ரனாவத் தமிழில் ஜெயலலிதா வாழ்க்கையான தலைவி படத்தில் நடிக்கிறார்.

You may have missed