ஜெயலலிதா வேடத்தில் கங்கனாவா…? ஏற்க மறுக்கும் ஸ்ரீரெட்டி

விஜய் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜெயலலிதா ’பயோபிக்’கில் ஜெயலலிதவாக நடிக்க கங்கணா ரணவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விப்ரி மீடியா நிறுவனம் தயாரிக்க மதன் கார்க்கி பாடல்கள் எழுத தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் தயாராகவுள்ளது இப்படம்.

இந்நிலையில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத் பொருத்தமானவர் இல்லை என்று நடிகை ஸ்ரீரெட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“ஜெயலலிதா இரும்பு பெண்மணி ,ஆட்சியையும், கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். அவருக்கு இணையானவர் யாரும் இல்லை. ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத் பொருத்தமாக இருப்பார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவருக்கு பதிலாக தென்னிந்திய நடிகைகளில் ஒருவரை ஜெயலலிதா வேடத்தில் நடிக்க தேர்வு வேண்டும் என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி