கங்கனா ரனாவத் இயக்கும் அயோத்தி ராமர்கோயில் படம்..

யோத்தி ராமர்கோயில் பிரச்னை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. அதில் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போதே அயோத்தி ராமர் கோயில் படம் எடுக்க உள்ளதாக கங்கனா ரனாவத் தெரிவித்தார். அப்படத்துக்கு அபரஜிதா அயோதியா என பெயரிடப்பட்டுள்ளது. பாகுபலி, மணிகர்ணிகா படங்களுக்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் இக்கதையையும் எழுதுகிறார். இப்படத்தை தற்போது கங்கனா ரனாவத்தே டைரக்டு செய்கிறார்.

இதுபற்றி கங்கனா கூறும்போது.’முதலில் இப்படத்தை தயாரிக்க எண்ணியிருந்தேன். அப்போது வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் டைரக்ட் செய்யும் எண்ணமே இல்லை. தற்போது அப்படங்கள் முடிகிறது. எனவே டைரக்‌ஷன் பொறுப்பை ஏற்கிறேன். இதில் நான் நடிக்கவில்லை. ஏற்கனவே மணிகர்ணிகா படத்தின் இயக்குனராக இருந்திருக்கிறேன் என்றார்.
கங்கனா ரனாவத் தற்போது தலைவி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய் டைரக்ட் செய்கிறார்.