2002ல் வெளிவந்த பைவ் ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமானவர் கனிகா.
தமிழில் கெரியரை துவங்கினாலும் கனிகா அதிகம் மலையாள சினிமாவில் தான் கவனம் செலுத்தினார்.
2008ல் கனிகா ஷியாம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு சாய் ரிஷி என்கிற மகனும் உள்ளார்.
இந்நிலையில் தற்போது தனது குழந்தை பற்றி இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார் கனிகா. தான் கர்பமாக இருந்தபோது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள அவர் :-
https://www.instagram.com/p/CAPEXjop-iP/
என் குழந்தை மிக பெரிதாக இருந்தது. அளவுக்கு அதிகமான எடை கொண்ட குழந்தை என்பதால் நான் கர்பமாக இருந்தபோது வயிறு மிக பெரிதாக இருந்தது. மற்ற பெண்களை போல பிரசவத்திற்கு பிறகு திரும்ப பழைய நிலைக்கு வரும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஏனென்றால் என குழந்தை பிறந்தவுடன் அவனுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதுநாள் வரை என தோற்றத்தை பற்றியோ, குழந்தை வளர்ப்பது பற்றியோ யாராவது விமர்சனம் கூறினால் அது பற்றி நான் கவலைப்பட்டதே இல்லை. நான் என்ன அடைய விரும்புகிறேன் என்பதை நோக்கி அமைதியாக உழைத்தேன்.
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். ஃபிட்டாக இருங்கள். ஆரோகியமான எதிர்காலம் தற்போது உங்கள் கையில் தான் இருக்கிறது என பதிவிட்டுள்ளார் .