பாலிவுட் பாடகி கனிகா கபூர் மீது இபிகோ 269 மற்றும் 270 பிரிவின் கீழ் வழக்கு பதிவு….!

--

பாலிவுட் பாடகி கனிகா கபூர் மீது இபிகோ 269 மற்றும் 270 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோயை, தொற்றைப் பரப்பும் வகையில் நடந்து கொண்டதால் இந்த வழக்குகள் போடப்பட்டுள்ளன.

கிருஷ்ண நகர் காவல்துறை உதவி ஆணையர் தீபக் குமார், கனிகா கபூர் காவல் நிலையம் வந்துதான் வாக்குமூலத்தை எழுத்து வடிவில் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

வாக்குமூலத்தை பதிவு செய்யச் சொல்லி பாலிவுட் பாடகி கனிகா கபூர் வீட்டு வாசலில் லக்னோ காவல்துறை நோட்டீஸ் ஒட்டியுள்ளது.

இந்நிலையில் பிரிட்டன், மும்பை, லக்னோ எனத் தான் சென்ற இடங்களில் சந்தித்து உரையாடிய அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்துள்ளதாகவும் கனிகா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.