லக்னோ:

கொரோனா பரிசோதனையில் பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு நெகட்டிவ் என மருத்துவ அறிக்கை வந்துள்ளது. முந்தைய சோதனையில் அவருக்கு கொரோனா பாசிடிவ் என இருந்தது.

கான்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் பிரம்மா தியோ ராம் திவாரி, கடந்த மார்ச் 13 அன்று அவரது தாய்மாமன் விபுல் டான்டன் நடத்திய ஹவுஸ் வார்மிங் விருந்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 56 பேர் கலந்து கொண்டனர். இதில் பாலிவுட் பாடகி கனிகா கபூரும் கலந்து கொண்டார். இதனிடையே கனிகாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாகக் கண்டறியப்பட்டது. ஆனால் அவர் இதனை வெளிப்படுத்தவில்லை. ஆகவே அவர் மீது அலட்சியமாகச் செயல்பட்டதாக லக்னோ காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

பொதுவாக கொரோனா நோயாளிகளுக்கு ஒவ்வொரு 48 மணி நேரமும் மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்படும். கனிகா தற்போது லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ விஞ்ஞான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் 5வது மாதிரி சோதனைக்குப்படுத்தப்பட்ட போது அதுவும் கொரோனா தொற்று பாசிட்டிவ் என்ற முடிவையே அளித்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனாலும் கனிகா கபூர் உடல் நிலை சமநிலையில் இருப்பதாகவும் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் மருத்துவமனை இயக்குநர் பேராசிரியர் ஆர்.கே.திமான் தெரிவித்திருந்தார்.

கடந்த வாரம் கனிகா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், விரைவில் கொரோனா நெகடிவில் இருந்து வெளியேறுவேன். நேரத்தை நமக்கு நன்றாகப் பயன்படுத்தக் கற்றுக்கொடுக்கிறது, அதே நேரத்தில் நேரம் நமக்கு வாழ்க்கையின் மதிப்பைக் கற்பிக்கிறது. நீங்கள் பாதுகாப்பாக இருங்கள். உங்கள் அக்கறைக்கு நன்றி ஆனால் நான் ஐ.சி.யுவில் இல்லை. நான் நன்றாக இருக்கிறேன். எனது அடுத்த சோதனை நெகடிவ் என்று நம்புகிறேன். என் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் வீட்டிற்குச் செல்ல காத்திருக்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கனிகா கபூருக்கு நடத்தப்பட்ட 5 வது சோதனையில் நெகடிவ் என வந்துள்ளது. இருந்தாலும் அடுத்த சோதனை நெகட்டிவ் வரும் வரை அவர் இன்னும் சில நாட்கள் லக்னோ மருத்துவமனையில் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.