சென்னை:

க்களவை  தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி, அங்கு  வெற்றி பெற்ற நிலையில், வெற்றி சான்றிதழுடன் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவருடன் அவரது தாயார் ராஜாத்தி அம்மாள், கணவர் அரவிந்தன் உடனிருந்தனர்.

கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி மற்றும் அவரது தாயார் ராசாத்தியம்மாள் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நடைபெற்ற லோக்சபா  தேர்தலில் திமுக கூட்டணி  தமிழகத்தில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அது போல் சட்டசபை இடைத்தேர்தலிலும் 13 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கிய கனிமொழி, அங்கு சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை திமுக தலைமையகத்தில் சந்தித்து ஆசி பெற்றார்.

அதைத்தொடர்ந்து தனது தாய் ராசாத்தியம்மாள் மற்றும் கணவர் அரவிந்தனுடன்  தனது தந்தை கருணாநிதியிடம் ஆசி வாங்குவதற்காக மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்துக்கு சென்றார்.

அங்கு தனது வெற்றி சான்றிதழை வைத்து கண்ணீர் மல்க கனிமொழி அஞ்சலி செலுத்தினார். அப்போது துக்கம் தாங்காமல் ராசாத்தியம்மாளும் அழத் தொடங்கினார். சமாதியை சுற்றி வரும் போது சமாதிக்கு பின்னால் நின்று மீண்டும் அழுதார். அவரை கனிமொழி தேற்றி அழைத்து சென்றார். கனிமொழி வெற்றி பெற்ற சான்றிதழை வைத்து கருணாநிதியிடம் ஆசி பெற்ற நிலையில், அவரக்கு கனிமொழிக்கு ராசாத்தியம்மாள் முத்தமிட்டு அழைத்து வந்தார்.