ன்யாகுமரி

ன்யாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு இன்று கனிமொழி எம் பி மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளார்.

திருக்குறளை எழுதிய திருவள்ளுவரைத் தமிழர்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவரும்  போற்றி வருகின்றனர்.  திருக்குறளை உலகப் பொதுமறை என்ஃஅ போற்றி வருகின்றனர்.  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் கன்யாகுமரியில் திருவள்ளுவருக்குப் பிரம்மாண்டமான சிலை ஒன்றை அமைத்து அவர் புகழை மேலும் பரப்பினார்.

திமுக மக்களவை உறுப்பினரான கனிமொழி இன்று கன்யாகுமரி சென்று திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.   இது குறித்து அவர் தனது டிவிட்டரில், “இன்று கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினேன்.

அவரது அறிவார்ந்த கருத்துக்கள் இன்றும் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஊக்க சக்தியாக இருப்பவை. தலைவர் கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான வள்ளுவர் சிலை சரியான பராமரிப்பில்லாமல் உள்ளது.” எனப் பதிவு இட்டுள்ளார்.

மேலும் அவர், ” வள்ளுவரின் சிறப்பைக் கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிலையைப் புறக்கணிப்பதன் மூலம் இந்த அரசு அவரையும் அவமதிக்கிறது.” எனவும் பதிந்துள்ளார்.