தேர்தலில் மக்கள் அ.தி.மு.க.வுக்கு வெடி வைப்பார்கள்! கனிமொழி காட்டம்

விருதுநகர்: அதிமுகவுக்கு தேர்தலில் மக்கள் வெடி வைப்பார்கள் என்று விமர்சித்த கனிமொழி, அந்த வெடியானது,  பலூன் வெடித்ததுபோல் வெடிக்கும் என கூறினார்.
‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் திமுக மகளிர்அணிச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை  செய்து வருகிறார். விழுப்புரத்தில் சுற்றுப்பயணம் செய்து பலதரப்பினரையும் சந்தித்து வருகிறார்.  அங்கு மக்களிடையே பேசிய கனிமொழியின் பேசியதாவது,
“தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் என ஸ்டாலினை உற்சாகமாக அறிவித்திருக்கிறோம். ஆனால், அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளரை டெல்லிதான் அறிவிக்கும் என்று அந்தக் கட்சியினரே சொல்கிறார்கள். மோடியா? லேடியா? என்று கேட்ட ஜெயலலிதாவால் அமைச்சரான ஒருவர், மோடியை டாடி என்கிறார். இந்த அவமானம் தேவையா? என கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில், ஆடசியாளர்கள் ரேசன் கடை, முகக்கவசம், பால் என அனைத்திலும் ஊழல் செய்கிறார்கள .  இதைக் கேட்டால், பத்திரிக்கையாளர் உட்பட அனைவரை யும் சுட்டுவிடுவேன் என்று இங்குள்ள அமைச்சர் மிரட்டுகிறார்.  தூத்துக்குடியில் கேள்வி கேட்ட 13 பேரை சுட்டுக்கொன்ற அராஜக ஆட்சிதான் அ.தி.மு.க. ஆட்சி.
ராஜேந்திரபாலாஜி பலூன்களை வெடித்ததுபோல், தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெடிவைக்கப் போகிறார்கள் மக்கள். எடப்பாடியாரை, எடப்பாடி ‘யார்?’ எனக் கேட்கிறார்கள் மக்கள். நீங்கள் அடிக்கல் நாயகர்கள். அடிக்கல் மட்டும்தான் நட்டு இருக்கின்றீர்கள் என்று காட்டமாக விமர்சித்தவர், அ.தி.மு.க.வுக்கு பதவிவெறி. அதனால்தான், வேளாண் சட்டங்களை, அடிமைகளைப் போல் ஆதரித்துள்ளார்கள்.
பத்து வருடங்களாக கஷ்டப்பட்ட மக்கள் திட்டாமல் இருப்பதற்காகவே தற்போது, பொங்கல் பரிசு என்ற பெயரில் ரூ.2,500 வழங்குகிறார்கள் என்று கூறியவர், லோக்சபா தேர்தலில் தி.மு.க. வாக்கு வங்கி அதிகரித்ததற்கு காரணம், கிராமசபைக் கூட்டங்கள்தான். அதனால் திமுக அறிவித்த கிராமசபை கூட்டத்துக்கு அதிமுக தடை விதித்துள்ளது,  தி.மு.க. வாக்கு வங்கி குறித்து குறை கூறுவதை விட்டுவிட்டு, அ.தி.மு.க.வினர் அவர்களது வாக்கு வங்கியை பாதுகாத்துக்கொள்ளட்டும். தாய்மார்கள் ஒவ்வொருவரும், தங்களின் மகளுக்கு ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற புத்தகத்தை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.