சென்னை,

தி இந்து நாளிதழினின் தொழிற்சங்க தலைவராக திமுக எம்.பி. கனிமொழி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

தொழிலாளர் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை கனிமொழிக்கு கிடைத்துள்ளது.

தி இந்து ஆங்கில நாளிதழில் தொழிலாளர்கள் நலச்சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு திமுக எம்.பி. கனிமொழி போட்டியிட்டார்.

நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று கனிமொழி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தம்  405 வாக்குகளைப் பெற்று, 103 வாக்கு வித்தியாசத்தில்  தன்னை எதிர்த்து போட்டியிட்ட சாலமோனை வீழ்த்தினார்.

இதன் காரணமாக தி இந்து தொழிற்சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை தட்டிச்சென்றார் கனிமொழி.

தொழிற்சங்கத்தில் உள்ள ஆறு பதவிகளில், ஐந்து பதவிகளுக்கான போட்டியில் கனிமொழி அணி யினர் வெற்றிபெற்றனர். சங்கத்தின் துணைத்தலைவராக பாரதிதாசனும், துணைச் செயலாளராக மார்ட்டின் தாமஸூம், பொதுச்செயலாளராக கமலநாதனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் இன்று பொறுப்பேற்க உள்ளனர்.  இவர்களின் பதவி காலம் 3 ஆண்டுகள் மட்டுமே.

கனிமொழி ஏற்கனவே தி இந்து நாளிதழில் துணை ஆசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.