சிறந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர் விருது: ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் கனிமொழி!

சென்னை:

சிறந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர் விருது பெற்ற திமுக எம்.பி. ஸ்டாலின் அதை திமுக தலைவர் ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

ஸ்டானிடம் விருதை காட்டி வாழ்த்து பெற்ற கனிமொழி

லோக்மாட்  ஊடக நிறுவனத்தின் சார்பில், சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதுகள் கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2வது முறையாக இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி டில்லியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துணைகுடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதில், மாநிலங்களவையின் 2018ம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது, திமுக மாநிலங்களவை உறுபினரான கனிமொழிக்கு வழங்கப்பட்டது.

வெங்கையா நாயுடு,  மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு இந்த விருதை வழங்கி கவுரவித்தார்.

துணைகுடியரசு தலைவரிடம் விருதுபெற்ற கனிமொழி

விருதை பெற்ற கனிமொழி நேற்று  பிற்பகல் சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் திமுக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து தனக்கு கிடைத்த விருதினை நேராக திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து காண்பித்தார். அவருக்கு ஸ்டாலின்  வாழ்த்து கூறினார்.