சென்னை: சென்னை விமான நிலையில் திமுக எம்.பி. கனிமொழியில், இந்தி தொடர்பாக கேள்வி எழுப்பிய சிஐஎஸ்எஃப் அதிகாரியிடம் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிட்டு உள்ளது. இந்த நிலையில், விமான நிலையங் களில் அந்த மாநிலத்தவர்களையே பணியமர்த்த வேண்டும் என்று தயாநிதி மாறன் வலியுறுத்தி உள்ளார்.

திமுக மகளிரணி தலைவியும், எம்.பியுமான கனிமொழி, டெல்லிக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்னைறபோது,    அங்கு பணியிலிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப்படை பெண் காவலர் (சிஎஸ்ஐஎஃப்) ஒருவர் “நீங்கள் இந்தியனா?” என கேட்டுள்ளார்.

இதுகுறித்து, கனிமொழி தனது டிவிட்டர்  பக்கத்தில், ‘இன்று விமான நிலையத்தில் ஒரு சிஐஎஸ்எஃப் காவலரிடம், எனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பேச முடியுமா என கேட்டபோது, அவர், “நீங்கள் இந்தியனா?” என்று என்னிடம் கேட்டுள்ளார். இந்தி மொழி அறிவதை வைத்தே, இந்தியனாக இருப்பதற்கு சமம் என்பது எப்போதிலிருந்து உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன்.’ என பதிவிட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அந்த சிஐஎஸ்எப் அதிகாரியிடம் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐஎஸ்எஃப் தலைமை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன்,  விமான நிலையத்தில் கனிமொழிக்கு நடந்த சம்பவம் தொடர்பாக உரிய இடத்தில் புகாரளிப்போம்  என்று கூறியவர், அந்தந்த மாநில மொழி தெரிந்தவர்களையே விமான நிலையங்களில் பணியமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.