கொரோனா தொற்றில் இருந்து குணம்: திமுக எம்பி கனிமொழி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திமுக எம்பி கனிமொழி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சட்டசபை தேர்தல் பிரச்சார காலத்தில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. வேட்பாளர்கள், கட்சியினர் என பலருக்கும் கொரோனா உறுதியானது.

தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக எம்.பி கனிமொழிக்கும் கடந்த 3ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. உடனடியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந் நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து கனிமொழி குணமடைந்து விட்டார் என்றும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கனிமொழிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.