சட்ட மாணவி தற்காலிக நீக்கத்தை எதிர்க்கும் கனிமொழி

சென்னை

கோவையை சேர்ந்த சட்ட மாணவி பிரியா தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதற்கு கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

சட்ட மாணவி பிரியா

கோவையை சேர்ந்தவர் சட்ட மாணவி பிரியா.   இவர் சமீபத்தில் தனது வகுப்பில் ஒரு பேச்சுப் போட்டியில் கலந்துக் கொண்டார்.   அப்போது அவர் காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் சிறுமி ஆசிஃபா பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்தை எதிர்த்துப் பேசி உள்ளார்.   அதை ஒட்டி அவர் கல்லூரியில் இருந்து தற்காலிகமாக நிக்கப்பட்டுள்ளார்.

இந்த செய்தி தமிழகம் எங்கும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.  சட்ட மாணவி பிரியாவுக்கு திமுகவின் மாநிலங்கள் அவை உறுப்பினர் கனிமொழி ஆதரவு தெரிவித்துள்ளார்.   சட்ட மாணவி பிரியாவை தற்காலிக நீக்கம் செய்தது சட்ட முரண் எனக் கூறி உள்ளார்.  மேலும் இந்த தற்காலிக நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.