தி.மு.க.,காங்கிரஸ் கூட்டணியை  பிரச்சினை இல்லாமல் இறுதி செய்த பெருமை கனிமொழியை சேரும் என்கிறார்கள் தி.மு.க. வட்டாரத்தில்.

என்ன நடந்தது?

தி.மு.க.கூட்டணியில் முதல் ஆளாய் சேர்ந்து உடன்பாட்டை ஏற்படுத்தியுள்ளது காங்கிரஸ்.சம்பிரதாயமாக ஒப்பந்தம் சென்னையில் கையெழுத்து ஆனாலும் பூர்வாங்க ஏற்பாடுகள் நடந்தது எல்லாம் டெல்லியில் தான்.

காங்கிரஸ் கூட்டணியை கையாளும் பொறுப்பை கனிமொழியிடம் ஒப்படைத்து விட்டு-கிராம சபை கூட்டம், கட்சிகாரர்கள் கல்யாணம் என்று வேறு வேலையில் பிசியானார் மு.க.ஸ்டாலின்.

‘பிளைட்’பிடித்து டெல்லி சென்ற கனிமொழி – நிறைய சந்திப்புகளை நடத்தி கூட்டணியை சுமுகமாய் வடிவமைத்தார்.

தங்கள் கட்சியின் டி.ஆர்.பாலு மற்றும் காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம், கே,எஸ். அழகிரி, திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என பல ரவுண்டு பேச்சு நடத்தினார்.

கடைசியாக- ராகுல்காந்தியுடன் இரு சுற்றுகள் பேச்சு நடத்தியதும், ’டீல்’-ஓ.கே. ஆனது.

தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர்கள் பெயரோடு தொகுதிகள் பட்டியலை சமர்பித்தது  காங்கிரஸ்.அந்த பட்டியலில் இருந்து 10 தொகுதிகளை தேர்வு செய்து காங்கிரசுக்கு கொடுத்துள்ளது தி.மு.க.

ஆம்.இரண்டு கட்சிகளின் மூத்த தலைவர்களுக்கு காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் பெயரும்,வேட்பாளர் பெயரும் தெரியும். ஆனால் அதிகாரப்பூர்வமாக இனிமேல் தான் அறிவிப்பு வரும்.

தொகுதிகள் எவை ,எவை என செய்திகள் கசிந்துள்ளன.

கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தனித்து களம் இறங்கியது. ஒரு இடத்திலும் வெற்றி பெற வில்லை.

அப்போது , காங்கிரஸ் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வாங்கிய 10 தொகுதிகளை குறித்து கொடுத்துள்ளது. அந்த தொகுதிகளே காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி நிச்சயம் காங்கிரசுக்கு உண்டு. சிவகங்கை உள்ளிட்ட தொகுதி களும் உறுதி.

–பாப்பாங்குளம் பாரதி