டில்லி

ப்போது தேர்தல் நடந்தால் திமுக வெற்றி பெறும் என கனிமொழி தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுடன் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டுள்ளார்.  அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

அவர் தனது பதிலில், “அதிமுகவின் தற்போதைய அரசியல் குழப்பங்களால் தி மு க வுக்கு லாபம் என சொல்ல மாட்டேன்.   ஆனால் ஆளும் கட்சியின் தற்போதைய நிலை எதிர்க்கட்சிகளுக்கு நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை.   ஒரு தொழிற்சாலை கூட தொடங்கப்படவில்லை.  முதலீடும் பின் தங்கி உள்ளது.  டெங்கு தீவிரமாகி வருகிறது.   திமுகவுக்கு ஜெயலலிதாவிடம் கருத்து வேற்றுமை இருந்தது.  ஆனால் அவருக்கு வாக்களித்த மக்கள் இப்போது ஏமாறுவதை எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.

தங்கள் தலைவி ஜெயலலிதாவின் சிகிச்சை, மரணம் பற்றியே இந்த அரசு பல பொய்த்தகவல்களை வெளியிட்டது.    நான் இதை எல்லாம் தெரிவிப்பது நீங்கள் கேட்டது போல தேர்தலை முன்னிட்டு இரக்கம் தெரிவிப்பது இல்லை.  அவருடைய கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் அனைவருமே அவர் மேல் மதிப்பு வைத்துள்ளனர்.  ஆனால் அவர் அமைச்சரவையில் இருந்த ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் அவரிடம் உண்மையாக இல்லை.  அவரைச் சுற்றி இருந்த குடும்பமும் அவரிடம் உண்மையாக இல்லை.  அதனால் மக்களுக்கு அதிமுக மேல் இருந்த நம்பிக்கை போய் விட்டது.

தற்போதைய நிலையில் தேர்தல் நடந்தால் அது நிச்சயம் திமுக வுக்கு வெற்றி வாய்ப்பை தேடித் தரும். அது மட்டுமின்றி இப்போது தேர்தலில் தோல்வி அடைந்தால் அ தி மு க என்றுமே ஆட்சிக்கு வரவே வராது.   இதுதான் இன்றைய நிலை” என தெரிவித்துள்ளார்.