டில்லி

டந்து முடிந்த பாராளுமன்றக் குளிர்காலத் தொடரில் கனிமொழி பாஸ்போர்ட்டில் மாநில மொழிகள் இடம் பெருமா என கேள்வி எழுப்பினார்.

மாநிலங்கள் அவை உறுப்பினரான கனிமொழி இந்திக்கு பதிலாக பாஸ்போர்ட்டில் மாநில மொழி இடம் பெறுமா என கேள்வி எழுப்பினார்.    மேலும் இந்தி பேசாத மக்களுக்காக இந்தக் கேள்வி எழுப்புவதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சர், ”பாஸ்போர்ட்டில் இந்தி இடம் பெறக் காரணம் அத் தேசிய மொழி என்பதால் மட்டுமே.    அதே போல இந்தி பேசாத மக்களுக்கு வசதியாக ஆங்கிலம் இடம் பெற்றுள்ளது.    பாஸ்போர்ட்டின் உரிமையாளர் மற்றும் விவரஙக்ள் ஆங்கிலத்தில் அச்சடிக்கப் படுகிறது” என தெரிவித்தார்.