கொரோனா தொற்றால் பலியான கன்னட இளம் நடிகர் டி.எஸ்.மஞ்சுநாத்…..!

கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.

நிலைமை சரியாகிவிட்டது என நினைக்கும் தருவாயில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் மீண்டும் தொடங்கி விட்டது. போன முறையை விட இந்த முறை அதி வேகமாக பரவி வருகிறது கொரோனா.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த கன்னட இளம் நடிகர் டி.எஸ்.மஞ்சுநாத் மரணமடைந்தது சாண்டல்வுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்யுக்தா 2 மற்றும் கெமிஸ்ட்ரி ஆஃப் கரியப்பா போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார் மஞ்சுநாத்.

அபிராம் இயக்கும் ’ஜீரோ பெர்சண்ட் லவ்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருந்தார் மஞ்சுநாத். அவருக்கு வயது 35.