மோடியாக மாறி உள்ள கன்னட நடிகர்

பெங்களூரு

ன்னட நடிகர் ஒருவர் மோடியைப் போலவே இருப்பதுடன் ஒரு படத்தில் மோடியாகவே நடிக்கிறார்

வலைத் தளங்களில் சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி ரெயில் நிலையத்தில் நிற்பது போல் ஒரு படம் வெளியாகி அது வைரலானது.   அந்தப் புகைப்படம் போட்டோஷாப் மூலம் உருவாக்கப்பட்டது என பலரும் கூறி வந்தனர்.  தற்போது அந்தப் புகைப்படம் உண்மை தான் எனவும் அதில் இருப்பவர் ஒரு கன்னட நடிகர் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

கன்னட நடிகரான அவர் பெயர் எம்.பி.  ராமச்சந்திரன்.  இவர் “ஸ்டேட்மெண்ட் 8/11” என்னும் கன்னடப்படத்தில் மோடியாக நடித்து வருகிறார்.   அவர் அச்சு அசலாக மோடியைப் போலவே இருக்கிறார்.   அதனால் அவர் ரெயில் நிலையத்தில் நிற்பதை யாரோ படம் எடுத்து அந்தப் படம் பரப்பப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.

கன்னடப் படமான “ஸ்டேட்மெண்ட் 8/11 என்னும் திரைப்படம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதாரமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.