செக்ஸ் சாட்ர்ச்சர் செய்த சினிமா தயாரிப்பாளருக்கு அடி உதை –  கைது!

பெங்களூரு:
டிக்க வாய்ப்பு கேட்ட இளம் பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த   திரைப்பட தயாரிப்பாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீரேஷ்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் திரைப்பட தயாரிப்பாளர் விரேஷ். இவரிடம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு இளம்பெண் ஒருவர் வந்தார். அவருக்கு வாய்ப்பு அளிப்பதாகக் கூறிய விரேஷ், தன்னுடைய பங்களாவுக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அந்த பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன அந்த இளம்பெண், போராடி அங்கிருந்து தப்பித்தார். பிறகு, இந்த சம்பவத்தை தனது உறவினர்களிடம் கூறி அழுதார்.

இதையடுத்து விரேஷின் பங்களாவுக்கு விரைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் வீரேஷை பிடித்து, அடித்து உதைத்தனர்.மேலும், அவர் மீது காவல்துறையில் புகாரும் அளித்தனர்.  இது குறித்து  உடனடியாக, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தயாரிப்பாளர் வீரேஷை கைது செய்து, விசாரித்து வருகிறார்கள்.