கன்னட அமைப்பினர் போராட்டம் எதிரொலி: கர்நாடகாவில் காலா பட டிக்கெட் விநியோகம் நிறுத்தம்

பெங்களூரு:

ஜினி நடித்துள்ள காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில்,  ‘சி’ திரைப்பட விநியோக நிறுவனம், கர்நாடகாவில் 120 இடங்களில் காலா படத்தை இன்று வெளியிட்டது.

இதை கண்டித்து இன்று கர்நாடகாவில்  காலா படம் வெளியாகி உள்ள அனைத்து தியேட்டர்கள் முன்பும் கன்னட வேதிகே அமைப்பை சேர்ந்தவர்கள், படத்தை திரையிடக்கூடாது என தியேட்டர்கள் முன்பு  ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.  இதன் காரணமாக தியேட்டர் வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.

கன்னடர்கள் போராட்டம் காரணமாக  பல மாவட்டங்களில் காலா படம் திரையிடுவது நிறுத்தப்பட்டுள்ளது. காலா படத்திற்கான டிக்கெட் விநியோகத்தையும் நிறுவத்துவதாக பல தியேட்டர்கள்கள் அறிவித்து உள்ளன.

குறிப்பாக மைசூர் மாவட்டம், அனகல், பலகாவி, சிக்கா மங்களூரு, ஹசன் மாவட்டம் உள்பட பல மாவட்டங் களில் கன்னட வேதிகே அமைப்பினரின் எதிர்ப்பு காரணமாக தியேட்டர்களில் காலா படம் வெளியிடுவது நிறுத்தப்பட்டுள்ளது.

காலா படம் வெளியாகும் அனைத்து தியேட்டர்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக பதற்றம் நிலவி வருகிறது.