பிரபல கன்னட சின்னத்திரை நடிகை மெபினா மைக்கேல் சாலை விபத்தில் மரணம்

பெங்களூரு:

பிரபல கன்னட சின்னத்திரை நடிகை மெபினா மைக்கேல் இன்று சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாடலாக தனது கலையுலக வாழ்வைத் துவங்கிய மெபினா மைக்கேல் (வயது 22), பின்னர் சின்னத்திரைகளில் நடித்து பிரபலமானார்.  ‘பியாட்டே ஹுதுஹிர் ஹள்ளி லைப்’ என்ற கன்னட ரியாலிட்டி ஷோ மூலம் புகழின் உச்சத்துக்குச் சென்றார்.

மெபினா மைக்கேல் இன்று தனது  நண்பர்களுடன் தனது சொந்த ஊரான மடிகேரிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது தேவிஹள்ளி என்னும் பகுதிக்கு அருகே எதிரே வந்த  டிராக்டருடன் அவர் கார்  மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நால்வருமே காயம் அடைந்தனர். அவர்களை மீட்ட காவல்துறையினர், அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மெபினா மரணமடந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறது. மேபினா மைக்கேலின்  மறைவிற்கு கன்னட சின்னத் திரையுலம் வருத்தம் தெரிவித்து உள்ளது.