உதயநிதி ஸ்டாலின் அடுத்துடுத்து மூன்று படங்களில் நடிக்கிறார் . ‘சைக்கோ’, ‘ஏஞ்சல்’, ‘கண்ணை நம்பாதே’ ஆகிய படங்கள் அவர் கைவசம் உள்ளது .

இந்நிலையில் இவர் தற்போது நடித்து வரும் ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம், சஸ்பென்ஸ், திரில்லர், நிறைந்த படமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் , ஆத்மிகா , சதீஷ் , பூமிகா உள்பட பலர் நடித்துள்ள படம் கண்ணை நம்பாதே’. இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசை அமைத்துள்ளார் . மனோகரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகிவரும் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்து வருகிறது.