“கள்ளன் ” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…!

அறிமுக இயக்குனர் சந்திரா இயக்கத்தில் மதியழகன் தயாரித்துள்ள படம் “கள்ளன் ”

தேனி அருகே, கிராமத்தில் வசிக்கும் ஒருவனுக்கு, வேட்டையாடுவதைத் தவிர தனது வாழ்வாதாரத்திற்காக வேறொன்றும் தெரியாது. அரசாங்கம் வேட்டையாடுவதைத் தடை செய்யும் போது, காலம் அவனது வாழ்க்கையை எப்படியெல்லாம் வேட்டையாடுகிறது என்பது தான் கதை

கரு.பழனியப்பன் நடித்துள்ள இப்படத்தின் பாடல்களை மறைந்த நா.முத்துக்குமார், யுகபாரதி, ஞானகரவேலு ஆகியோர் எழுதியுள்ளனர்.

படம் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: chandra, Kallan, Karu Palaniappan, na. muthukumar
-=-