சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வாசம்’.

இந்தப் படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய ‘கண்ணான கண்ணே’ பாடல் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற பாடலாகும்.

இந்தப் பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

இது தொடர்பாக இமான் தனது ட்விட்டர் பதிவில்,

எனது இசைப் பயணத்தில் இந்தப் பாடலை விசேஷமானதாக்கி விட்டீர்கள். மதம், சாதி, நிறம், இனங்களைத் தாண்டி உலகம் முழுவதும் சக மனிதர்களுக்கு அன்பைப் பரப்புவோம்” என்று தெரிவித்துள்ளார் இமான்.

மேலும், இந்தப் பாடல் பல்வேறு விருதுகள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.