‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…!

ஆன்டோ ஜோசஃப் பிலிம் கம்பெனி தயாரிப்பில் துல்கர் சல்மான் ரிது வர்மா இணைந்து நடிக்கும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’.

தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்த படத்தை வியாகாம் 18 நிறுவனம் மார்க்கெட்டிங் பணிகளை செய்ய விருக்கிறார்கள். இந்த படத்துக்கு மசாலா கஃபே இசையமைக்கவிருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது .