கான்பூர் ரெயில் விபத்து: காயமடைந்தவர்களுக்கு நிவாரணம்! ரெயில்வே அமைச்சர்

டில்லி,

சியல்தா- அஜ்மீர் ரெயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என்று மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்து உள்ளார்.

இன்று அதிகாலை உ.பி. மாநிலம் அருகே சியல்தா- அஜ்மீர் விரைவு ரெயிலின் 14 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் பலியாயினர். மேலும் 28 பேர் காயமடைந்தனர்.

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது  டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

எதிர்பாராமல் அஜ்மீர் – சியல்தா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதை தொடர்ந்து நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறேன். சம்பவ இடத்திற்கு விரைவாக செல்லுமாறு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்குமாறும், மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது.

ரயில் தடம்புரண்டது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். அனைத்து பயணிகளுக்கும் தேவையான உதவிகள் செய்து தரப்படும் எனக்கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.