கணவனை கடித்துக் கொன்ற மனைவி

கான்பூர்:

ணவனை, மனைவி கடித்துக்கொன்ற சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தி் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ளது
பகாதிபூர் என்ற கிராமம். இங்கு அரவிந்த் என்பவர் தனது மனைவி கோமதி தேவி, தாய் , மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

download

இந்த நிலையில், ஃபதேபூரில் வசிக்கும் தனது பெற்றோரை காண செல்ல வேண்டும் என்று கோமதி தேவி,  அரவிந்திடம் கூறினார். அதற்கு  அதற்கு அரவிந்த் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கோமதிதேவி, கணவர் அரவிந்தின் அரவிந்தின் கழுத்து, மார்பு, வயிற்ருப் பகுதியில் ஆக்ரோஷசெல் கடித்துக்குதறினார்.

இந்தத் தாக்குதலை எதிர்பாராத அரவிந்த் உடலில் கடிபட்ட ரத்தம் பீறிட்டது. அவர் மயங்கி விழுந்தார். அக்கம்பக்கம் இருந்தவர்கள், அரவிந்தை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கோமதி கடித்ததில் ரத்தம் அதிகமாக வெளியேறி அரவிந்த் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்னர். பிறகு அரவிந்தின் உடல்  மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அரவிந்தின் தயார் குலாபி தேவி பேக்வார் காவல் நிலையத்தில் தனது மருமகள்  கோமதிதேவி மீது புகார் அளித்தார். இதையறிந்த கோமதிதேவி, தனது இரு குழந்தைகளுடன் தலைமறைவாகிவிட்டார்.

காவல்துறையினர் தற்போது கோமதி தேவியை தேடி வருகிறார்கள்.

கணவனை கடித்தே கொன்ற இந்த   சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.