‘கந்த சஷ்டி கவசம்’ புகழ் சூலமங்கலம் ஜெயலட்சுமி காலமானார்!

--

சென்னை,

ந்த சஷ்டி கவனம் பாடிய பிரபல சகோதரிகளான சூலமங்கலம் சகோதரிகளில் ஒருவரான ஜெயலட்சுமி காலமானார்.

சென்னை பெசண்ட் நகர் வீட்டில் வசித்து வந்த சூலமங்கலம் ஜெயலட்சுமி வயது முதிர்வு காரணமாக அவர் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 85.

அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரின் வீட்டிலேயெ வைக்கப்பட்டுள்ளது.

சகோதரிகளில் ஒருவரான ராஜலட்சுமி ஏற்கனவே காலமாகிவிட்டார். தற்போது ஜெயலட்சுமி மரணமடைந்துள்ளார்.

கர்நாடக இசை உலகில் புகழ் பெற்ற பாடகிகாளாக வலம்வந்தவர்கள்  சூலமங்கலம் சகோதரிகள். பக்திப் பாடல்களை இணைந்து பாடி தங்களுகென தனி இடத்தை பிடித்தவர்கள்.

உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான இந்துக்கள் விரும்பி கேட்கும்  ‘கந்த சஷ்டி கவசம்’ பாடல் இந்த சகோதரிகளால் பாடப்பட்டது.

இவர்கள்  தஞ்சாவூர் அருகேயுள்ள சிறிய கிராமமான சூலமங்கலத்தில் கர்ணம் ராமசுவாமி ஐய்யர், ஜானகி அம்மாளுக்கு மகளாக  பிறந்தனர். இவர்களது பெற்றோரும் கர்நாடக இசை கலைஞர்களே.

சகோதரிகள் இருவரும் 1950-ம் ஆண்டிலிருந்தே  கர்நாடக இசைப் பாடல்களை பாடி வருகின்றனர்.

இசைத்துறையில் சுமார் 30 ஆண்டுக்கும் மேலாக ஆயிரக்கனக்கான பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளனர்.