கந்த சஷ்டி விழா: திருச்செந்தூரில் நாளை சூர சம்ஹாரம்…

திருச்செந்தூர்:

ந்தனின் பிறப்பின் மகிமையை எடுத்துக்  கூறும் கந்த சஷ்டி விழா கடந்த 8ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இறுதி நாளான நாளை, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதன் காரணமாக திருச்செந்தூர் உள்பட முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம அலைமோதி வருகிறது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் விடான திருச்செந்தூரில் வைத்துதான் சூரனை முருகன் வதம் செய்தாக வரலாறு கூறுகிறது. எனவேதான், திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவில், சூரசம்ஹார நிகழ்வும் பிரசித்தி பெற்றது.

சூர சம்ஹாரம் காட்சி (பைல் படம்)

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா கடந்த 8ந்தேதி அதிகாலை யாகசாலை பூஜையுடன் தொடங்கிய நிலை யில், விழா நாட்களில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்பாடு, உச்சிகால தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை நடைபெற்று வருகிறது.

மாலையில், திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இறுதி நாளான நாளை (13ஆம் தேதி)  சூரசம்ஹாரத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு,  நாளை அதிகாலை 1  மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனமும், உதயமார்த்தாண்ட அபிசேகமும் நடைபெற இருக்கிறது.

தெடர்ந்து காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை உள்பட மற்ற கால பூஜைகளும் நடைபெறும். பின்னர் மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், லட்சகணக்கான பக்தர்கள் சுப்பிர மணிய சுவாமி கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும்,  திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திபு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் வசதிக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து  திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.