கந்த சஷ்டி விழா: பழனியில் கோலாகலமாக நடைபெற்ற முருகன் திருக்கல்யாணம்

பழனி:

ந்தனின் பிறப்பின் மகிமையை எடுத்துக்  கூறும் கந்த சஷ்டி விழா கடந்த 8ந்தேதி அனைத்து முருகன் கோவில்களிலும்  யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

நேற்று   சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று முருகன் திருக்கல்யாணம் நடைபெற்று வருகிறது.

அறுபடை வீடுகளில்  3வது வீடான பழனியில் நேற்று   சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில், இன்று காலை  திருக்கல்யாணமும் விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வள்ளி தெய்வயானை சமேத முருகனின் அருள் பெற்று சென்றனர்.

பழனி மலைக் கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா கடந்த வியாழக்கிழமை காப்புக்கட்டும் நிகழ்ச்சி யுடன் தொடங்கியது. ஒரு வாரம் மலைக் கோயிலில் நடைபெற்ற இந்த விழாவுக்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

கந்த சஷ்டி விழாவின் 6வது நாள்  நிகழ்ச்சியாக நேற்று (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது.

இதன் காரணமாக நேற்று  மதியம் உச்சிக்கால பூஜையைத் தொடர்ந்து சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு, சூரர்களை வதம் செய்வதற்கான வேல் வாங்கும் வகையில், மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமாரசாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு  மலைக் கோயில் நடை அடைக்கப்பட்டு, சுவாமி பராசக்தி வேலுடன் மலை அடிவாரம் வந்தடைந்தார்.  பின்னர், மாலை 6 மணிக்கு மேல் வடக்கு கிரி வீதியில் தாரகாசூர வதமும், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரி வீதியில் சிங்கமுகசூர வதமும், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் வதமும் நடைபெற்றது.

.இரவு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா கொண்டாடப்பட்டு, மலைக் கோயிலில் சம்ப்ரோட்சண பூஜையை அடுத்து, அர்த்தஜாம பூஜை நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று காலை  மலைக் கோயிலில் வள்ளி, தேவசேனா சமேதர் சண்முகருக்கு திருக்கல்யாணம்  கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சாமி தரிசம் செய்னதர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Kantha Sasti Festival: Murugan wedding function held at Palani, கந்த சஷ்டி விழா: பழனியில் கோலாகலமாக நடைபெற்ற முருகன் திருக்கல்யாணம்
-=-