சென்னை:
ந்தனுக்கு அரோகரோ.எல்லா மதமும் சம்மதமே என்று, கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட   கறுப்பர் கூட்டத்தின் இழிவான செயல்  குறித்து சுமார் ஒரு வாரம் கழித்து தற்போது ரஜினி டிவிட் பதிவிட்டுள்ளார்.

கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்தும் நோக்கில், திகவைச் சேர்ந்த, கறுப்பர் கூட்டம் என்ற சேனல்  வீடியோ வெளியிட்டிருந்தது. இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில்,  கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கறுப்பர் கூட்டம் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுஉள்ளது. மேலும், அந்த சேனலில்  உள்ள வீடியோக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சுமார் ஒருவார காலத்துக்கு பிறகு, ஆன்மிக அரசியல் தொடங்கப்போவதாக கூறி வரும் ரஜினி, கறுப்பர் கூட்டத்தின் வீடியோ விவகாரம் குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில்,  கந்த சஷ்டி கவசத்தை மிக கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாத படி செய்தவர்கள் மீது துரித நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்குவதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
இனிமேலாவது மததுவேஷமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்…. ஒழியணும்.
எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.