பஞ்சாங்கத்தில் இடம்பெற்ற கன்னியாகுமரி பாதிப்பு…கடலூருக்கும் எச்சரிக்கை

ராமேஸ்வரம்:

ஒகி புயல் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இது குறித்து 2017-18 ஆற்காடு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கார்த்திகை மாதத்தில் கன்னியாகுமரி பாதிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தமானில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டு புயல் வீசும். இதனால் கடலூர், ராமேஸ்வரம் பாதிக்கும் என்றும் பஞ்சாங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய புயல் காரணமாக, கடலூர் பாதிக்கப்படும் என்று வானிலை மையம் தற்போது அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.