மீனவர்களை மீட்டுத் தா!: கன்னியாகுமரியில் பல்லாயிரக்கண மக்கள் ரயில் மறியல்

கன்னியாகுமரி:

கி புயல் தாக்கியதில் காணாமல் போன பலநூறு மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர வேண்டும் என்று கன்னியாகுமரியில் தற்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 30-ஆம் தேதி வங்கக் கடலில் ஓகி புயல் உருவானது. இதனால் தென் தமிழகமும், கேரள மாநிலத்தின் தென் பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டன

ஓகி புயல் வருவதற்கு முன்பே ஆழ் கடலில் தங்கி மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரையேற முடியாமல் கடலில்  தத்தளித்தனர்.  பல மீனவர்கள் பலியானார்கள். மேலும் பல மீனவர்களைகளைக் காணவில்லை. இன்னும் சிலர் குஜராத், லட்சதீவு உள்ளிட்ட பகுதிகளில் கரை ஒதுங்கினர்.

இவர்களை மீட்க இந்திய கடலோர காவல் படையும், விமான படையும், கடற்படையும் மீட்டு வருகின்றன. இந்த நிலையில் மீனவர்களை மீட்கக் கோரி கன்னியாகுமரியில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர்கள் காணாமல் போய் ஏழு நாட்கள் ஆன பிறகும் இதுவரை கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கன்னியாகுமரி குழித்துறையில் உறவினர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

[embedyt] https://www.youtube.com/watch?v=dm37PeZVKzM[/embedyt]