நாகர்கோவில்:

பிரதமர் மோடி கலந்துகொண்ட விழா நேற்று கன்னியாகுமரியில் நடைபெற்றது. அதில், தமிழக டில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரத்தை பாதுகாப்பு அதிகாரிகள் மேடையில் இருந்து இழுத்துச் சென்று கீழே இறக்கி விட்ட நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்ற கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி, ரூ.40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பங்கேற்றனர்..

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பிரதமர் மோடிக்கு அதிகாரிகள் இன்று தொடங்கி  வைக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக விளக்கம் அளித்துக் கொண்டிருந்தனர், அப்போது , ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்பட அவர்களுடன் முன்னாள் அமைச்சரும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியுமான தளவாய் சுந்தரமும் இருந்தார்.

அப்போதுஅஙகு வந்த பிரதமரின் பாதுகாப்பு அதிககாரிகள் தளவாய் சுந்தரத்தை வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்துச்சென்றனர்.  அவர்களிட்ம் தளவாய் சுந்தரம் தான் யார் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அதைக் கேட்காத அதிகாரிகள் அவரை அகற்றியது பெருத்த அவமானமாக பார்க்கப்படுகிறது.

இந்த கட்சி அதிகாரிகள் மட்டும் அரசியல் கட்சி நிர்வாகிகளும், விழாவுக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கும் கடும் அதிருப்தி அடைந்தனர்.

அதுபோல மோடி மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது, பாஜகவினர் குறட்டை விட்டு தூங்கும் காட்சிகள் குறித்த வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

விழாவில்,  ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையே ரயில் இணைப்பை புதுப்பித்தல் மற்றும் புதிய பாம்பன் இணைப்பு பாலம் கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

மார்த்தாண்டபுரம் – பார்வதிபுரம் மேம்பாலங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

சென்னை எழும்பூர் – மதுரை இடையே தேஜஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.