விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், வேலராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘க/பெ ரணசிங்கம்’.
இந்த படம் ஜீ ப்ளக்ஸில் வெளியிடப்பட்டுள்ளது . அனைவருமே படக்குழுவினரைப் பாராட்டி தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் க/பெ ரணசிங்கம்’ படத்தைத் தயாரித்துள்ள கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில் :-


”உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில். இதைச் சொல்ல எவ்வளவு நாட்கள் காத்திருந்தோம். எங்கள் அனைவருக்குமே இது உணர்ச்சிகரமான தருணம். நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்களுக்குத் திரையரங்க அனுபவத்தைத் தர நாங்கள் மீண்டும் வந்திருக்கிறோம். ‘க/பெ ரணசிங்கம்’ திரைப்படத்தை அக்டோபர் 16 முதல் திரையரங்குகளில் பாருங்கள்” என பதிவிட்டுள்ளது.