‘க/பெ. ரணசிங்கம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…..!
ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘க/பெ. ரணசிங்கம்’. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராகப் பணிபுரிகிறார் ஜிப்ரான்.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, ‘பூ’ ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இவர்களைத் தவிர்த்து மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார்.
Here it is #KaPaeRanasingamFL ☺️@aishu_dil @pkvirumandi1 @GhibranOfficial @PeterHeinOffl @artilayaraja @shan_dir @onlynikil @Bhavanisre @RangarajPandeyR pic.twitter.com/jO6E8syKZN
— VijaySethupathi (@VijaySethuOffl) May 22, 2020
இறுதிக்கட்டப் பணிகளில் மும்முரமாக இருக்கும் படக்குழு, தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது.