உலகம் முழுதும் 3000 தியேட்டர்களில் கபாலி ரிலீஸ்

 ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் கபாலி ஜூலை 1ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. தாதா வேடத்தில் ரஜினி  நடித்திருப்பது, ரஞ்சித் இயக்கம்  போன்றவை ரஜினி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கின்றன.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரை இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமான பேர் இணையத்தில் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

download

.இந்த நிலையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில், 2000க்கும் அதிகமான தியேட்டர்களில் ‘கபாலி’ வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

.தவிர உலகம் முழுவதும் மேலும் 1000 தியேட்டர்களில் இப்படம்  வெளியிடவிருப்பதாக கூறப்படுகிறது.  ரிலீஸாகும் உலக நாடுகள் பட்டியலில்  சீனாவும் உண்டாம்.