கபாலி திரைப்பட வழக்கு: 225 இணையதளங்களை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:

பாலி படம் வளைதளங்களில் வெளியாவதை தடுக்க மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Kabali

கபாலி திரைப்படம் திருட்டுத்தனமாக இணையதளங்கள் மூலமாக வெளியாவதை தடுக்க தயாரிப்பாளர் தாணு சென்னை ஐகோர்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியிடப்படும் இணையதளங்கள் பற்றிய விவரமும் கொடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி கிருபாகரன் வழக்கை விசாரித்து,  கபாலி திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிடும் 225 இணையதளங்களை முடக்க மத்திய அரசின் டிராய் அமைப்புக்கு உத்தர விட்டார்.

மேலும் கேபிள் டிவி மற்றும் பேருந்துகளிலும் படத்தை ஒளிபரப்ப உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.