காப்பான்’ படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கு ‘பந்தோபஸ்த்’ எனத் தலைப்பு…!

‘காப்பான்’ படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கு ‘பந்தோபஸ்த்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இந்தப் படத்தைத் தயாரிக்க , ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, விவேக் பாடல்கள் எழுதுகிறார். கே.வி.ஆனந்த், பட்டுக்கோட்டை பிரபாகர், கபிலன் வைரமுத்து மூவரும் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர்.

சூர்யாவின் 37-வது படமான இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில், இன்று (ஜூலை 28) காலை 10 மணிக்கு தெலுங்குத் தலைப்புடன் கூடிய போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் எஸ்.எஸ்.ராஜமெளலி. தெலுங்கில் ‘பந்தோபஸ்த்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி