கேஜேஆர் நிறுவனம் தயாரித்து வரும் க/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர் பல மாதங்களுக்கு முன்பு வெளிவந்து வைரலாகி இருந்தது.

ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘க/பெ. ரணசிங்கம்’. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராகப் பணிபுரிகிறார் ஜிப்ரான்.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, ‘பூ’ ராம், வேல.ராமமூர்த்தி , ரங்கராஜ் பாண்டே , ஜி.வியின் தங்கை பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் படமும் ஓடிடி மற்றும் டிடிஹெச் தளத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தை ஓடிடியில் ஒரு முறை பார்ப்பதற்காக 199 ரூபாய் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தற்போது க/பெ ரணசிங்கம் படத்துக்கு யு சான்றிதழை வழங்கியுள்ளது தணிக்கை குழு.