பெங்களூரு

வ்வொரு கிரிக்கெட் வீரரும் தாங்கள் நாட்டுக்காக விளையாடுகிறோம் என்பதை நினைக்க வேண்டும் என ஸ்ரீசாந்துக்கு கபில்தேவ் கூறி உள்ளார்.

ஸ்ரீசாந்த்

கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீசாந்த் ஒரு பேட்டியில், “என்னை இந்திய கிரிக்கட் கமிட்டி விளையாடத் தடை விதித்தது.  அந்தத் தடையை நீக்கக் கூடாது என கேரளா நீதிமன்றம் கூறி உள்ளது.   அதே போல ஐ பி எல் போட்டிகளிலும் பலர் தடை செய்யப்பட்டு பின் தடைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.  மற்றவர்களுக்கு ஒரு சட்டம் எனக்கு ஒரு சட்டம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.   இதுவரை சில வருடங்களில் அனைவருக்கும் தடை நீக்கப்பட்டுள்ளது.  ஆனால் எனக்கு தடை தொடரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

பெங்களூருவில் நடந்த ஒரு கோல்ஃப் போட்டியின் இடையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் இது குறித்து பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.  கபில்தேவ், “ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தாங்கள் நாட்டுக்காக விளையாடுகிறோம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.  இந்திய கிரிக்கெட் கமிட்டியைப் பற்றி விமர்சிக்கும் முன்பு ஒரு கிரிக்கெட் வீரர் தனது விமர்சனத்துக்கு சரியான காரணத்தை கூற வேண்டும்.  அவர் தனிப்பட முறையில் ஏதும் கருத்துக் கூற உரிமை உண்டு.  ஆனால் கமிட்டியை குறை கூறும் முன்பு சரியான காரணத்துடன் குற்றம் குறைகளைக் கூற வேண்டும்” எனக் கூறி உள்ளார்.